திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பேருந்துகள்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
திருவண்ணாமலையில் 15ம் தேதி கிரிவலம் நடைபெற உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம்தோறும் பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாதம்தோறும் பௌர்ணமியில் மக்கள் கிரிவலம் சென்று வருகிறார்கள். இந்த மாதத்திற்கான கிரிவலம் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள் என்பதால் சென்னை கோயம்பேடு, தாம்பரம், வேலூர், வந்தவாசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செஞ்சி, ஆரணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கபடுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.