இன்ஸ்டாவில் வீசிய காதல் வலை.. சிக்கிய பெண்களிடம் மோசடி! – சிக்கிய மன்மத இளைஞர்!
இன்ஸ்டாகிராம் மூலமாக பல பெண்களுடன் பழகி பணம் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பயாஸ். இவர் ஆரணியை சேர்ந்த பாலாஜி என்பவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அதன்வழியாக பல பெண்களிடம் பேசியும் வந்துள்ளார்.
இதுகுறித்து பாலாஜியின் நண்பருக்கு தெரிய வர அவர் பாலாஜியிடம் சொல்லியுள்ளார். பயாஸிடம் பெண் குரலில் பேசி ஆரணி பேருந்து நிலையம் வரவழைத்த பாலாஜி தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதற்காக பயாஸை கண்டித்து கணக்கையும் டெலிட் பண்ண சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த பயாஸ் மேற்கொண்டு பாலஜியை தாக்கியும் உள்ளார்.
இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் பயாஸை கைது செய்து செல்போனை போலீஸார் சோதனையிட்ட போது அதில் இன்ஸ்டாகிராமில் 100க்கும் மேற்பட்ட திருமணமான மற்றும் இளம்பெண்களிடம் காதல் வார்த்தைகளை வீசி பண மோசடி செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.