Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விடுமுறை முடித்து வீடு திரும்ப - 1450 பேருந்துகள் இயக்கம்!

Written By Sugapriya Prakash
Updated: ஞாயிறு, 12 ஜூன் 2022 (13:52 IST)
பள்ளிகள் திறக்கப்படுவதால் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

 
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
 
அதேபோல் பள்ளிகள் செயல்படும் நேரம் குறித்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
எனவே அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளியில் மாணவர்களுக்கு அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
மேலும், பள்ளி, கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு கூடுதலாக 1450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோடை விடுமுறைக்கு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிதுள்ளார்.

எல்லாம் காட்டு

கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ்!..

யாரா இருந்தாலும் விட்ராதீங்க!.. ஆக்சன் எடுங்க!.. விஜய் போட்ட ஆர்டர்!...

டெல்லி போராட்டம்!.. மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!. பணிந்த ஒன்றிய அரசு!...

இனிமேல் உனக்கு துணை நிற்பேன்!.. மகனை தூக்கி கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்!..

வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. முக்கியமாக கவனிக்க வேண்டியது எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments