1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (09:42 IST)

எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரத்து இல்லை! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்த எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரச் வழங்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பராமரிப்பு பணிகளின் காரணமாக செப்டம்பர் 22 மற்றும் 29ம் தேதிகளில் எழும்பூர் – காரைக்குடி மற்றும் காரைக்குடி – எழும்பூர் ரயில்கள் பகுதியாக செங்கல்பட்டு வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் முந்தைய அறிவிப்பு செல்லாது என அறிவித்து மேற்படி ரயில்கள் வழக்கம்போல முழுவதும் சென்னை வரை செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.