1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:34 IST)

மக்களவைக்கு விடை கொடுத்த சோனியா..! ராஜ்யசபா எம்பியாக பதவியேற்பு..!!

Soniya Gandhi
மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.  மக்களவையில் 25ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் மாநிலங்களவை உறுப்பினரானார்.
 
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ரேபரேலி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 5 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற சோனியா காந்தி, இந்த முறை 6ஆவது முறையாக களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், உடல்நல பிரச்னை காரணமாக தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இச்சூழலில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு  சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி இன்று பதவி ஏற்று கொண்டார். புதிய அத்தியாயத்தை தொடங்கும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து தெரிவித்தார்.


மக்களவை உறுப்பினராக 25 ஆண்டுகளை சோனியா காந்தி நிறைவு செய்துள்ளார் என்றும் நானும் சக மாநிலங்களவை உறுப்பினர்களும் சோனியா காந்தியின் வரவை எதிர்நோக்கியுள்ளோம் என்றும்  வாழ்த்துச் செய்தியில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.