1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (16:07 IST)

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி..! பதவிப்பிரமாணம் செய்த ஆளுநர்..!

Ponmudi
உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவி ஏற்ற நிலையில், அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என சரமாரி கேள்வி எழுப்பியது.

பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி முடிவெடுக்க இன்று வரை நீதிபதிகள் கெடு விதித்தனர். நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து,  அமைச்சராக இன்று பதவியேற்க வருமாறு பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார்.
 
இந்நிலையில் கிண்டி ராஜ்பவனில் உள்ள அரங்கில் மாலை 3.30 மணிக்கு பொன்முடி அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர், மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.