திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (15:03 IST)

வெளியே பாண்டி ஜூஸ்.. உள்ளே பாக்கெட் சாராயம் – கும்பகோணத்தில் சிக்கிய பலே கும்பல்

கும்பகோணத்தில் ஜூஸ் என்ற பெயரில் சாரயத்தை கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணத்தில் உதயம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் சிலர் ஜூஸ் பாக்கெட்டுக்கள் தயாரித்து விற்பனை மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் அடிக்கடி ஜூஸ் பாக்கெட்டுகள் ஆர்டர் எடுக்க அடிக்கடி அங்கே கனரக வாகனங்கள் வருவதும் போவதுமாய் இருந்திருக்கின்றன.

ஆனால் அந்த வீட்டில் ஏதோ வித்தியாசமாக நடப்பது போல் அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து போலீஸுக்கு தெரியவர, திடீரென அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். உள்ளே பேரல் பேரலாக சாராயம் இருப்பதை கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “பாண்டி ஜூஸ்” என்ற பாக்கெட்டில் சாராயத்தை அடைத்து விற்பனை செய்து வந்திருக்கிறார்கள் என்பது போலிஸுக்கு தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து சாரயம் கடத்திய ராஜு என்கிற நபர், அவரது உதவியாளர் மற்றும் அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் சாராய பேரல்களையும், அவற்றை கடத்த பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.