வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2023 (19:12 IST)

ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை- அண்ணாமலை

‘’ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை’’ என்று தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 29 வயதே ஆன ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,’’ கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 29 வயதே ஆன ராணுவ வீரர் பிரபு, திமுக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து, அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன்.

ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை.

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று  இருப்பதை, பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


உடனடியாக கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க தமிழக பாஜக   சார்பில் வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.