புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (09:39 IST)

ஷூவுக்குள் இருந்த பாம்பு… தெரியாமல் கைவிட்ட பெண் – வினாடிக்குள் நடந்த விபரீதம் !

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கே கே நகரை அடுத்துள்ள கன்னிகாபுரம் 3 ஆவது தெருவில் பழனி மற்றும் சுமித்ரா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர் நேற்று வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெகு நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த ஷூ ஒன்றை எடுத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது  அதனுள் இருந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்துள்ளது.

இதையடுத்து வலியால் துடித்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அக்கம்பக்கத்தினர் சேர்த்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மிகவும் ஆபத்தான நிலைமையில் உள்ளதாக சொல்லிய மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.