திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2024 (22:37 IST)

இழுபறியில் இருக்கும் 6 தொகுதிகள் எவை எவை? இறுதிக்கட்ட தகவல்..!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்து நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஆறு தொகுதிகள் இழுபறியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த ஆறு தொகுதிகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம். 
 
சுமார் 30 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆறு தொகுதியில் மட்டும் இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது அந்த தொகுதிகள் நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, கரூர், ஆரணி மற்றும் தேனி.
 
தேனி தொகுதியை பொருத்தவரை தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அதை போல் ஆரணியில் திமுக வேட்பாளர் தரணி வேந்தன் மற்றும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆகிய இருவருக்கும் இடையே சரியான போட்டி ஏற்பட்டு இருப்பதாகவும் அதிமுக வேட்பாளர் கடைசி நேரத்தில் முடிந்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அதே போல் கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளர் தங்கவேலு ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் ஜோதிமணி நல்லவர் என்றாலும் அவர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பது அவர்களுக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தர்மபுரி தொகுதியை பொருத்தவரை பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னணியில் இருந்தாலும் திமுக வேட்பாளர் மணியும் கடும் போட்டி கொடுத்து வருகிறார் என்பதும் இந்த தொகுதி தான் உண்மையிலேயே இழுபறி தொகுதி என்றும் கூறப்படுகிறது. 
 
நாமக்கல் தொகுதியை பொருத்தவரை திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக அதிமுக வேட்பாளர் தமிழ்மணி போட்டியிடுகிறார் இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு என்பதால் திமுக சுணக்கமாக வேலை செய்து வருவதாகவும் ஆனால் அதிமுக வேட்பாளர் பம்பரமாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
கடைசியாக நீலகிரி தொகுதியில் ஆ ராசா பின்தங்கி இருப்பதாகவும் மத்திய அமைச்சர் எல் முருகன் கடும் சவால் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 
Edited by Mahendran