திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (09:08 IST)

பற்றி எரிந்த பத்ரகாளியம்மன் கோவில் கோபுரம்! – அதிர்ச்சியில் பக்தர்கள்!

Temple fire
சிவகாசியில் உள்ள பிரபலமான பத்ரகாளியம்மன் கோவில் கோபுரம் திடீரென தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவிலின் ராஜ கோபுரத்திற்கு வண்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டதுடன், வண்ண வேலைபாடுகளை பார்க்க முடியாதபடி சாக்குகளை வைத்து கோபுரத்தின் உச்சிப்பகுதி மறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் திருமண ஊர்வலம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்போது சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அதில் வானவேடிக்கை ஒன்று ராஜகோபுர சாரத்தின் மேல் விழுந்ததில் தீ பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் சாரம் முழுவதும் தீப்பிடித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பத்ரகாளியம்மன் கோவில் ராஜ கோபுரம் பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி பக்தர்கள், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K