வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (08:49 IST)

திடீரென சரிந்த கல்குவாரி; 12 தொழிலாளிகள் நிலை என்ன? – மிசோரத்தில் அதிர்ச்சி!

accident
மிசோரத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரி ஒன்றில் திடீரென கற்கள் சரிந்து ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் உள்ள நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் என்ற கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த பலர் வேலை பார்த்து வந்துள்ளனர்.

நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கமாக பணிகளில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குவாரி கற்கள் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் கற்குவியலுக்குள் சிக்கினர். உடனடியாக விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

நேற்று விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்றும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மாயமான ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K