1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (08:09 IST)

விசிலை முழுங்கி அவதிப்பட்ட சிறுவன் – மருத்துவர்கள் போராட்டம் !

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் விசிலை முழுங்கியதை அடுத்து அதை மருத்துவர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பின் எடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகளான திலீப் குமார் மற்றும் நாகஜோதி ம்பதியினருக்கு கௌதம் மற்றும் அஸ்வின் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின போட்டிகளில் அஸ்வின் கலந்து கொண்டு பரிசு வாங்கி உள்ளார்.

அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்ட விசிலை அவர் ஊத முயற்சித்த போது தவறுதலாக சிறுவனின் தொண்டைக்குள் சென்றுள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு எண்டோஸ்கோப்பி மூலம் விசில் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்த மருத்துவர்கள், நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலில் இருந்து அந்த விசில் அகற்றப்பட்டுள்ளது.