திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (15:57 IST)

மாணவர்களின் கையில் கயிறு கட்டக்கூடாதா.? நீதிபதி சந்துருவின் பரிந்துரைக்கு பாஜக எதிர்ப்பு..!!

H Raja
பள்ளி மாணவர்களின் கையில் கயிறு கட்டக்கூடாது உள்ளிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு இருக்க கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
 
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒய்வுபெற்ற கே.சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்று  சமர்பித்தார். 
 
அதில், அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது, தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும், கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன . 
 
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா,   மாணவர்களின் கையில் கயிறு கட்டக்கூடாது என எப்படி சொல்லலாம்? என்று கேள்வி எழுப்பினார்.  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, ஹிந்து மக்களை குறிவைத்து இது போன்று பரிந்துரை செய்துள்ளார் என்றும் இதை ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு அவர் கொடுத்திருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

 
இந்தப் பரிந்துரைகள் கண்டிப்பாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும்  இந்தப் பரிந்துரைகளை மாநில அரசு கண்டிப்பாக ஏற்கக் கூடாது என்றும் எச். ராஜா கூறினார்.