1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஜூலை 2018 (08:24 IST)

சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற அயோக்கியன் கைது

சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற அயோக்கியனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகும் வேளையில் திருவண்ணாமலையில் ஒரு அயோக்கியன் சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவண்ணாமலை தானிப்பாடியை சேர்ந்த குரு(17) என்ற சிறுவன் பன்னீர் செல்வம்(36), என்பவரிடம் தனக்கு வேலை வாங்கித்தரும்படி கூறியுள்ளான். பன்னீர்செல்வமும் குருவிற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவனை பைக்கில் அழைத்துச் சென்றார்.
 
பைக்கை மறைவான இடத்தில் நிறுத்திய பன்னீர்செல்வம், சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயந்துபோன சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினான்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் பன்னீர் செல்வத்தை கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.