செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 15 மே 2021 (23:12 IST)

செந்தில்பாலாஜி என்னும் நான்....படித்த கல்லூரியில் வரவேற்பு

செந்தில்பாலாஜி என்னும் நான் கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகம் முழுவிவரம் !
 
 
 
தமிழக அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றவர்களின் வரிசையில் கரூர் செந்தில்பாலாஜியும், ஒருவர் ஏனென்றால் மக்கள் நலனை சார்ந்த ஏராளமான திட்டங்களை தீட்டி மக்கள் மனதில் மிகப்பெரிய பெயர் பிடித்தவர்களில் மிக்கிய பங்கு வகித்தவரளில் கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜி என்றவரும் ஆவார்., இந்நிலையில், செந்தில்பாலாஜி அவர்கள் அவர், கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் B.com, வணிகவியல் படித்துள்ளார். இவரது பதவி, ஏற்பு நிகழ்ச்சியினை தொடர்ந்து கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு துறை மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு துறை உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன் தலைமையில், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிலையில், கடந்த முறை அமைச்சராக திரு.V. செந்தில் பாலாஜி இருக்கும் போது, அவர் படித்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியினை மேம்படுத்த கல்வி முறையில் பல்வேறு முன்னேற்றப்பாதைகளை கொண்டு வந்தவர் செந்தில்பாலாஜி, ஆம், கடந்த  2011-2012 ம் கல்யாண்டில் M.A( Economics), M.Sc (Chemistry)  என்கின்ற துறையும்,  ஆராய்ச்சி படிப்பில் M.Phil, P.hd (Comuter science), M.Phil (Maths)., M.Phil., P.hd., (Botony)  இந்த படிப்புகளை Full Time / PartiTime  முறையில் படிக்க அனுமதியும் மேலும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக மேம்பாட்டுக்கு ரூ. 2.00 இலட்சம் மதிப்பில் உபகரணங்களும் வழங்கப்பட்டது. 2012-2013 ம் கல்வியாண்டில் M.A.Tamil, B.Sc(Statitics),  ஆகிய புதிய பாடப் பிரிவுகளை 10 புதிய உதவிப் பேராசிரியர் பணியிடங்களுடன் தொடங்கவும் M.Phill, P.hd(Chemistry), M.Phill, P.hd.(Histroy), P.hd (Zoology), M.Phill, P.hd(English)  ஆகிய முழு நேர பகுதி நேர ஆராய்ச்சிப்படிப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 2013-2014 ம் கல்வியாண்டில் M.Phil, P.hd  (Economic s, Physics, Commerce ) ஆகிய மூன்று ஆராய்ச்சி படிப்புகளுக்கும் மேலும்  12 வகுப்பறைகள்,  M.Phill, P.hd  படிப்புகளுக்கான ஆய்வுக்கூடம்,  மாணவ மாணவியர்களுக்கான கழிவறை கட்டிடங்கள் அமைப்பதற்கு  4.5 கோடி நிதி பெற்று தந்தும், 2014-2015 ம் கல்வியாண்டில் B.B.M.,B.Sc(Geology)UG படிப்புக்கும், ஆராய்ச்சி படிப்பில் M.Phill., P.hd (Tamil)  ஆகிய புதிய படிப்புகளுக்கு அனுமதி பெற்று தந்ததும் இல்லாமல், அதே ஆண்டில் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தமிழக அரசு கலைக்கல்லூரிகளின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே உள்ள இடங்களை விட கூடுதலாக 194 இடங்களுக்கும் முதுகலை மற்றும் முதுஅறிவியல் பாடப் பிரிவுகளில் கூடுதலாக 88 இடங்களுக்கும் ஆகமொத்தம் இவ்வாண்டில் மட்டும் 282 கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்க ஏற்பாடு செய்து கரூர் மாவட்ட ஏழை எளிய மாணவ மாணவியர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றும் வகையில் பல்வேறு ஆணைகளை பெற்று தந்தவர் திரு V.செந்தில்பாலாஜி என்கின்றனர் இந்த கல்லூரியில் பயின்ற பல்வேறு துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள்.
 
மேலும், தற்போது கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகளாகிய நாங்கள் அரசு கலைக்கல்லூரியின் கல்வித்தந்தை என்றழைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் என்கின்றனர் தற்போதைய மாணவ மாணவிகள், இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழ்த்துறையின் உதவி பேராசிரியர் முனைவர் பெ.ராஜன் அவர்களுக்கும் பாராட்டு குவிகின்றது என்கின்றனர் மாணவர்கள்