Daily Horoscope
✕

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு.. 24வது முறையாக நீட்டிப்பு.!

Written By Mahendran
Updated: புதன், 6 மார்ச் 2024 (13:55 IST)
செந்தில் பாலாஜியின் காவல் ஏற்கனவே 23 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 24 வது முறையாக மார்ச் 11 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு 24-வது முறை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை மூன்று மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

செந்தில் பாலாஜி வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த உத்தரவை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பினர் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மார்ச்11ஆம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments