செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.. வெளியே வருவாரா?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று சென்னை ஹைகோர்ட் வழங்க இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவாரா? ஜாமீன் கிடைக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் இருக்கிறார்
இந்த நிலையில் அவர் பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பதும் உச்ச நீதிமன்றத்தில் கூட அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி அதன்பின் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று காலை இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்றாலும் எம்எல்ஏவாக இருக்கிறார் என்றும் அதனால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் வர வாய்ப்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை ஜாமீன் வழங்க கடமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva