புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:06 IST)

ஒரே நாளில் 500 புள்ளிகள் ஏறிய சென்செக்ஸ்!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 57 ஆயிரம் புள்ளிகளை கடந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சென்செக்ஸ் நல்ல முறையில் உயர்ந்து வந்தது சற்றுமுன் வர்த்தகம் முடிந்த நிலையில் இன்று ஒரே நாளில் 514.33 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது என்பதும் 57,852. 54 புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தபோது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் நிப்டி 157.90 புள்ளிகள் உயர்ந்து 17234.15 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பது குறித்தும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் நல்ல முறையில் உயர்ந்திருப்பதாகவும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன