1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (20:14 IST)

வாரத்தின் முதல் நாளே எகிறிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை உயர்ந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருந்த சென்செக்ஸ் சற்றுமுன் பங்குச்சந்தை முடிவுக்கு வந்த நிலையில் 363.79 புள்ளிகள் உயர்ந்து 52950.63 என்ற புள்ளியில் வர்த்தக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் நிப்டி இன்று ஒரே நாளில் 122.10 புள்ளிகள் உயர்ந்து என்ற 15885.15  புள்ளியில் முடிவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை உயர்ந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பெரும்பாலான பங்குகள் உயர்ந்துள்ளது என்றும் இதனால் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் இந்த வாரம் முழுவதுமே பங்கு சந்தை ஏற்றத்தில் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்