1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:47 IST)

ஏற்றத்துடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்வு!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை இன்று பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்றுள்ளது 
 
சற்றுமுன் பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 295 உயர்ந்து 55627 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிப்டி புள்ளிகள் 82 உயர்ந்து 16532 என்ற புள்ளியில் வர்த்தகமாகி  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆட்டோமொபைல் வங்கிகள் உட்பட பல துறைகளில் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போது அனைத்து நாடுகளும் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு உள்ளதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் அழிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது