திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள்: உயர் கல்வித்துறை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிட தக்கது 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாகவே நடக்கும் என்றும் உயர்கல்வித் துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டதால் நேரடி தேர்வா? ஆன்லைன் தேர்வா? என்ற குழப்ப நிலை மாணவர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.