விக்ரமாதித்தன் போல் சாகசங்களை செய்வார் எடப்பாடி பழனிசாமி: செல்லூர் ராஜூ
விக்ரமாதித்தன் கதையில் வரும் சாகசங்கள் போல் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு சாகசங்களை செய்வார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக தொடங்கி உள்ளது என்றும் அதிமுகவுக்கு பிரகாசமான ஆண்டாக உருவாகும் வகையில் இந்த ஆண்டு இருக்கும் என்றும் தெரிவித்தார்
விக்ரமாதித்தன் கதையில் வரும் சாகசங்கள் போல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்துவார் என்றும் அதிமுகவுக்கு மக்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியை இந்த ஆண்டு கொடுக்க உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
புயல் மழை வறட்சி என எல்லா காலங்களிலும் அதிமுக அரசு நிர்வாகத்தை முடித்துவிட்டு மக்கள் பணி செய்தது என்றும் மக்களுக்கு ஏற்பட்டிருப்பதை இழப்புகளை ஈடு செய்கிற அளவுக்கு முடியாவிட்டாலும் அதிமுக சார்பிலும் தொண்டு நிறுவனங்கள் சார்பாக மக்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தோம் என்றும் அவர் கூறினார்.
புதிய ஆண்டு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்றும் என்பதற்காக நானும் என் குடும்பத்தார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva