திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (14:46 IST)

சிங்கம், சிறுத்தை இடையே அண்ணாமலை மாட்டிக் கொண்டார்: செல்லூர் ராஜூ

அதிமுக மற்றும் திமுக ஆகிய சிங்கம் சிறுத்தைகள் இடையே அண்ணாமலை மாட்டிக் கொண்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் டார்கெட் தற்போது பாஜக வாக தான் உள்ளது என்றும் பாஜகவின் அண்ணாமலை, மோடி ஆகியோர்களை தான் இரு கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பாஜகவின் விளம்பர படத்தின் டிரைலர் போன்றது என்றும் பிளாப் ஆகி விடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தேவி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று அவர் பிரச்சாரம் செய்தபோது சிங்கம் சிறுத்தை இடையே அண்ணாமலை மாட்டிக்கொண்டதாகவும் இடத்திற்கு ஏற்ற மாதிரி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எழுதிக் கொடுக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்

மேலும் அதிமுகவில் இருந்தபோது ஓபிஎஸ் எப்படி இருந்தார், ஆனால் இன்று பலாப்பழத்துடன் இருக்கிறார் என்றும், பலாப்பழம் பழுக்காமலே அழுகி போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்

அண்ணாமலை மற்றும் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva