புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (13:03 IST)

இந்தியாவை விட தமிழகம் பொருளாதாரத்தில் உயர்வு! – செல்லூர் ராஜூ!

இந்திய பொருளாதாரத்தை விட தமிழகத்தின் பொருளாதாரம் அதிகளவில் உயர்ந்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் ”வளர்ச்சி 4.5% ஆகச் சரிந்து இந்திய பொருளாதாரம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக IMF-ம் , பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். 6 ஆண்டுகால பாஜக ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது. அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளது!” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கு வகையில் பேசியுள்ள அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ ”இந்திய பொருளாதாரத்தை விட தமிழகத்தின் பொருளாதாரம் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை கண்டு பொறுக்க முடியாமல் ஸ்டாலின் இப்படி பேசுகிறார்” என்று கூறியுள்ளார்.