புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (11:11 IST)

தோழியின் தந்தையை வெட்டி கொன்ற இளம்பெண்! – கொலை குறித்து வாக்குமூலம்!

சென்னை அருகே திருவொற்றியூர் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட கற்பூர வியாபாரி குறித்த பரபரப்பு வாக்கு மூலத்தை அளித்துள்ளார் கைதான பெண்.

திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியை சேர்ந்த கற்பூர வியாபாரி அம்மன் சேகர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று முன்தினம் வியாபாரத்திற்காக வெளியே சென்ற அம்மன் சேகர் புதுவண்ணாரபேட்டை பகுதியில் கழுத்து அறுபட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது அம்மன் சேகருடன் இளம்பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்த விசாரணையில் திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் 24 வயதான பவித்ரா என்ற பெண்தான் பேசிக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அம்மன் சேகரின் செல்போனிலும் அந்த பெண்ணோடி எடுத்து கொண்ட புகைப்படங்கள் இருந்துள்ளது. இதனால் பவித்ராவை பிடித்து போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்துள்ளது.

பவித்ராவும், அம்மன் சேகரின் மகளும் பள்ளி காலத்திலிருந்தே ஒன்றாக படித்து வந்துள்ளனர். இதனால் அம்மன் சேகரின் மகளை பார்க்க அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார் பவித்ரா. அப்போது பவித்ரா மீது அம்மன் சேகருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் விலையுயர்ந்த பொருட்களை பவித்ராவுக்கு வாங்கி கொடுத்து ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். மேலும் நெருக்கமாக இருப்பதை தனது செல்போனிலும் படம் எடுத்து கொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில் பவித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படவும் ‘நீ என்னைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் செல்போனில் எடுத்த படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

இதனால் அவரை கொலை செய்து விட திட்டமிட்ட பவித்ரா அவருக்கு பிறந்தநாள் பரிசு தருவதாக வர சொல்லி கத்தியால் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார்.

பவித்ரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார். இந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.