வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (13:36 IST)

தேர் விபத்தை மனசாட்சி இருந்தால் அரசியல் ஆக்காதீங்க..! – அமைச்சர் சேகர்பாபு!

Sekar Babu
தஞ்சாவூர் தேர் விபத்து சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் சேகர்பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தேர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில் தேர் நகர்வலம் முடிந்து கோவிலை நெருங்கியபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் தேரினுள் நின்ற 11 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். பிரதமர் மோடியில் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் இழப்பீடு வழங்கி அறிவித்துள்ளார்.
Charriot

இந்நிலையில் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தேர் விபத்தில் இறந்தவர்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிமுக வெளிநடப்பு செய்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர் விபத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “தஞ்சாவூர் தேர் விபத்து சம்பவத்தை மனசாட்சி உள்ள யாரும் அரசியலாக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தேர் விபத்து தொடர்பாக தனிநபர் விசாரணை குழு அமைக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.