செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (14:21 IST)

இதுக்கு பேசாம பாஜகவில் சேர்ந்திடலாம்...ராஜேந்திர பாலாஜியை கிண்டல் செய்த சீமான் !

தமிழக அரசியல் களம் இன்றைக்கு பரபரப்புடன் இயங்கிவருகிறது. விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்., 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற  உள்ளது. இதற்கான திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் தொடர்சியாக பிரச்சாரத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.
சமீபத்தில் ராஜிவ்காந்தி கொலை குறித்து பேசி சர்சையில் சிக்கிய சீமானுக்கு அரசியலில் இது போதாத காலம்.  இப்போது, நாம் தமிழர் கட்சி மீதும், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சீமான் மீதும் , நடவடிக்கை எடுத்தால் தனது ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்படுமோ என அதிமுக அரசு நினைக்கிறதாக தெரிகிறது.
 
அதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட சீமான் தான் பேசிய கருத்து சரியே என வாதிட்டு வருகிறார்.அதேசமயம் திராவிட கட்சிகளை வார்த்தைகளால் வெளுத்து வாங்கி வருகிறார்.
 
இந்நிலையில் இன்று சீமான் கூறியுள்ளதாவது :
 
பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிற  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அக்கட்சியில் இணைந்து விடலாம்  என தெரிவித்துள்ளார்.