1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2017 (14:30 IST)

"விஷாலை இறக்கி விட்டிருக்கலாம், ஜாலியாக இருந்திருக்கும்" சீமான் கிண்டல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'இந்த தேர்தலில் விஷாலை இறக்கி விட்டு பார்த்திருக்கலாம், ஜாலியாக இருந்திருக்கும்' என்று கிண்டலடித்ததார்
 
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டுவேட்டை நடத்திய சீமானுக்கு அப்பகுதி மக்கள் பூத்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'விஷால் நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வருவதாக கூறுகிறார். யாருக்கு நல்லது என்பதை அவர்தான் கூற வேண்டும். 
 
விஷால் நல்லது செய்ய வருகிறார் என்றால் நாங்கள் எல்லாம் கெடுதல் செய்யவா அரசியலுக்கு வந்துள்ளோம். என்னை கேட்டால் அவரை இறக்கிவிட்டு பார்த்திருக்கலாம், தேர்தல் களம் ஜாலியாக இருந்திருக்கும். ஆனால் இந்த தேர்தல் ஆணையத்திற்கு அது பிடிக்கவில்லை. எங்களை பொருத்தவரை இந்த தேர்தல் ஒரு ஜாலியான விளையாட்டு' என்று கூறினார்.