Daily Horoscope
✕

எல்லாம் சின்ன பசங்க!. இது கூட தெரியல!.. தவெகவை நக்கலடித்த சீமான்...

Written By Mahendran
Updated: சனி, 7 பிப்ரவரி 2026 (16:57 IST)
தமிழக அரசியலைப் பொறுத்தவரை கடந்து பல வருடங்களாகவே அதிமுக, திமுக என்று இரண்டு கட்சிகள்தான் பிரதானமாக இருக்கிறது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி. தமிழகத்தில் இருக்கும் மற்ற அரசியல் கட்சிகளும் இந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்து வருகிறது..

அதன்பின் சீமான் வந்தார்.. அவர் கடந்த பல வருடங்களாகவே தனித்துப் போட்டியிட்டு வருகிறார்.. தற்போது விஜய் வந்திருக்கிறார். விஜய் ஒரு நட்சத்திர நடிகர் என்பதால் அவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்டு சதவீத வாக்குகளை வாங்குவார் என கருதப்படுகிறது.
அவர் 15 சதவீத வாக்குகளை வாங்குவார், 18 சதவீத வாக்குகளை வாங்குவார், 40 சதவீத வாக்குகளை வாங்குவார் என பலரும் கருத்துக்கணிப்பு சொல்லி வருகிறார்கள்..

இந்நிலையிதான், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு சமீபத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 236 தொகுதிகள்தான் என்றாலும் சுமார் 10 ஆயிரம் மனுக்களை தவெக நிர்வாகிகள் வாங்கியதாக செய்திகள் வெளியானது.. அதில் பலரும் பனையூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சீமான் ‘பனையூர் ஒரு தொகுதியே இல்லை என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எல்லாம் சின்ன பசங்க.. போகப்போக கற்றுக்கொள்வார்கள். ஏதோ விற்பனை பண்டத்தை வாங்குவது போல விருப்ப மனுவை வாங்கியிருக்கிறார்கள்’ என பேசியிருக்கிறார்.<>

எல்லாம் காட்டு

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

கரப்பான்பூச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர்.. நாட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு...

இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எத்தனை நாள் நீடிக்கும்? எங்கெங்கு கனமழை?

ஒரு எலுமிச்சம்பழம் ரூ.15.. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments