1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜனவரி 2024 (09:45 IST)

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து எனக்கு உறுதுணையாக இருப்பார்: சீமான்

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து  எனக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் அவர் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கட்சியின் நிர்வாகிகள் பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி சென்று அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கத்தை பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவரது டார்கெட் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்தை கூறி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அவரது அரசியல் குறித்து கூறியுள்ளார். 
 
அவர் கூறியதாவது: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். சீமான் மட்டும்தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைப்பார். நல்ல ஆட்சி, நல்ல அரசை உருவாக்க வேண்டும்.
 
Edited by Siva