வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (16:51 IST)

ரஜினிக்கு கூறிய அதே கருத்தை விஷாலுக்கும் கூறிய சீமான்

பொதுவாக அரசியலுக்கு புதியவர்கள் வந்தால் ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் அவர்களுடன் களத்தில் நேருக்கு நேர் மோதி பார்ப்பதையே விரும்புவார்கள். ஆனால் சீமான் போன்ற ஒருசிலர் மட்டுமே அரசியலுக்கே இவர்கள் எல்லாம் வரக்கூடாது என்றும் தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்க கூடாது என்றும் கூறுவது உண்டு. ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது மக்கள் கையில் உள்ளது என்பதையே இவர்கள் மறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது தமிழகத்தை தமிழன் மட்டுமே ஆளவேண்டும்,  ரஜினி தாராளமாக அரசிலுக்கு வரட்டும், ஆனால் முதல்வராக நினைக்க கூடாது என்று கூறியவர்தான் இந்த சீமான்.

தற்போது இதே கருத்தை நேற்று அரசியல் கட்சி தொடங்கிய விஷாலுக்கும் சீமான் கூறியுள்ளார். நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் ஆரம்பித்துள்ளது தவறில்லை, ஆனால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது என்று சீமான் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத கட்சியை நடத்தும் சீமான், இதுபோன்ற கருத்தை சொல்ல தகுதியில்லாதவர் என்று நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.