புதன், 19 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 ஜனவரி 2025 (10:47 IST)

பெரியாரை எதிர்த்ததற்காக சீமானை பாராட்டுகிறேன்.. துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக, தாய் மற்றும் சகோதரியுடன் கூட தனது உடல் இச்சையை தீர்த்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் சொன்னது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், உள்பட பலர் சீமானின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற துக்ளக் 55வது ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு சீமானுக்கு ஆதரவு தெரிவித்தார்.

சீமானுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலில் பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக அவரை பாராட்டுகிறேன். ஏனென்றால், பெரியாரை யாரும் எதிர்க்கக் கூடாது. உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும், பெரியாரை ஒன்றும் செய்யக்கூடாது என்று தான் கூறிக் கொண்டு வருகிறார்கள்.

பெரியாருக்கு எதிராக கருத்து பேசுபவர்களை எல்லோரும் சேர்ந்து பாய்வது என்பதுதான் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஆனால் அதை முதன் முதலில் உடைத்தது சோ, இப்போது சீமான் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

Edited by Mahendran