காவல்நிலையத்தில் ஆஜராக வந்த சீமான்.. 300 போலீசார் குவிப்பு..!
நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில் விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். இருப்பினும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராவதால் வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றியுள்ள தெருக்களில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும்
வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றியுள்ள தெருக்களில் 300 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகை விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றாலும் சம்மன் அனுப்பியபடி ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர் அதனை அடுத்த இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறையில் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva