புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2019 (19:20 IST)

’காதலியை பார்க்க குடும்பத்துடன் வந்த காதலன்’... ஊரே கூடி அடித்ததால் பரபரப்பு..! பரவலாகும் வீடியோ

சேலம் மாவட்டம்  ஊமகவுண்டம்பட்டியில் வசித்து வந்த காதலியைப் பார்க்கச் சென்ற காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரை அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து அடித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஊமகவுண்டம்பட்டியில் தனது காதலி இருந்ததால், அவரைப் பார்க்க காதலன் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதைப் பார்த்து கோபம் அடைந்த அந்த ஊமகவுண்டம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு நடுரோட்டில் வைத்து அவர்களை அடித்து காரிலேயே விரட்டி அடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து 15  நாட்களுக்கு பின் கழித்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.