செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (16:42 IST)

பட பாணியில் ரகசிய திருமணம்; காதல் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!

வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த மனைவியை காதல் கணவனே கொன்று எரித்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பெங்களூரை சேர்ந்த பொறியாளர் முரளி கிருஷ்ணா. இவருக்கும் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த கோகிலவாணி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கோகிலவாணி அரியலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு பட பாணியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். பெங்களூருவில் வேலை பார்க்கும் முரளி கிருஷ்ணா, எப்போதெல்லாம் கோகிலவாணி சேலம் வருகிறாரோ அப்போதெல்லாம் வந்து சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கோகிலவாணி படிக்கும் கல்லூரியில் மாணவர் ஒருவருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக முரளி கிருஷ்ணாவுக்கும், கோகிலவாணிக்கும் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.

சமீபத்தில் சேலம் சென்ற முரளி கிருஷ்ணா பெங்களூர் செல்லலாம் என்று கோகிலவாணியை அழைத்துள்ளார். ஓமலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது தான் கொண்டு வந்திருந்த கத்தியை வைத்து கோகிலவாணியை கழுத்தில் குத்தி கொன்றுள்ளார். பின்னர் கேனில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி கோகிலவாணி உடலை தீ வைத்து எரித்துள்ளார்.

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முரளி கிருஷ்ணா தானாக சென்று போலீஸில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K