1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (18:13 IST)

'லியோ' படத்தின் விஜய்யின் புதிய போஸ்டர் ரிலீஸ்...

leo vijay
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ பட புதிய போஸ்டர் ரிலீஸாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  மாஸ்டர் படத்திற்குப் பின்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளளது.

சமீபத்தில், லியோ படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகமூட்டிய நிலையில், இன்று லோகேஷ் கனகராஜ் லியோ பட புதிய போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளார்.

Keep calm and prepare for battle  என்ற கேப்சனுடன் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விஜய் ஆக்ரோசமாக உள்ளார்.

இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.