செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (20:45 IST)

என் மகள் மீரா மிகவும் அன்பானவன், தைரியமானவள்- விஜய் ஆண்டனி

vijayantony
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி. இவரது மகள் மீரா   கடந்த 19 ஆம் தேதி அதிகாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், விஜய் ஆண்டனி குடும்பத்தாருக்கு தமிழ் சினிமாத்துறையினர் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி தன் மகள் மீரா அன்பானவள், தைரியமானவள் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘’என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி,வறுமை, வன்மம், இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில்  நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்..

உங்கள் விஜய் ஆண்டனி’’ என்று  உருக்கமாக தெரிவித்துள்ளார்.