வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (10:36 IST)

சென்னை அருகே வானில் தென்பட்டது பறக்கும் தட்டா? விஞ்ஞானி விளக்கம்

UFO
சென்னை அருகே வானில் பறக்கும் தட்டு போன்று மர்ம பொருள் தென்பட்டது குறித்து விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். 
 
சென்னையை அடுத்த மொட்டு காடு என்ற பகுதியில் ஜூலை 26 ஆம் தேதி  திடீரென வானில் கண்ணை கவரும் விதமாக ஒளிக்கீற்று ஒன்று ஏற்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் அது பறக்கும் தட்டுகள் போன்ற உருவம் இருப்பதை கண்டு அதிர்ச்சியாக இருந்தது 
 
இது குறித்து விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதன்மை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் அவர்கள் கூறிய போது பறக்கும் தட்டுகள் மூலம் வேட்டுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததாக இதுவரை எந்தவிதமான ஆதாரமும் இல்லை. 
 
பூமிக்கு அருகே உள்ள நட்சத்திரங்களில் இருந்து வேற்றி கிரக மனிதர் ஒளியின் வேகத்தில் பயணித்தால் கூட பூமிக்கு வர பல நூறு ஆண்டுகள் ஆகும். எனவே வேற்று கிரக மனிதர்கள்  பூமி அல்லது நிலவுக்கு வர முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran