திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:59 IST)

சென்னை - இந்தோனேஷியா நேரடி விமானம்.. ஆகஸ்ட் 11 முதல் தொடக்கம்..!

Flight
சென்னையிலிருந்து இந்தோனேசியாவிற்கு இதுவரை நேரடி விமானம் இல்லாமல் இருந்த நிலையில் ஆகஸ்ட் 11 முதல் சென்னை இந்தோனேசியா நேரடி விமான போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை சென்னையில் இருந்து இந்தோனேசியா செல்ல வேண்டுமென்றால் மலேசியா அல்லது சிங்கப்பூர் சென்று செல்ல வேண்டும். அல்லது சென்னையிலிருந்து டெல்லி சென்று, அங்கிருந்து நேராக இந்தோனேசியா செல்ல வேண்டும் 
 
இந்த நிலையில் சென்னையிலிருந்து நேரடியாக இந்தோனேசியாவுக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது அந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு ஆகஸ்ட் 11 முதல் சென்னையில் இருந்து நேரடியாக இந்தோனேசியாவுக்கு விமானம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்தோனேசியாவில் உள்ள மேடான் என்ற நகரில் இருந்து தினமும்   மாலை புறப்படும் விமானம் இரவு 8:15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் வந்தடையும். அதேபோல் சென்னையில் இருந்து இரவு 9:40 மணிக்கு புறப்படும் விமானம் நள்ளிரவு 2.30 மணிக்கு இந்தோனேசியா மேடான் நகருக்கு சென்றடையும்.  
 
இந்தோனேசியா செல்லும்  சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த விமானம் மிகவும் பலனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva