புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (08:42 IST)

கிட்டத்தட்ட 600 நாட்களுக்கு பின் பள்ளிகள்: என்னென்ன நடக்கும்?

தமிழகத்தில் சுமார் 586 நாட்களாக மூடிக்கிடந்த சுமார் 32 ஆயிரம் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆம் தமிழகத்தில் சுமார் 586 நாட்களாக மூடிக்கிடந்த 1 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படிக்கும் 32 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 
 
இன்று பள்ளிக்கு வரும் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பாடங்கள் நடத்தப்படமாட்டாது. அதற்கு பதிலாக கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி உற்சாகப்படுத்தும் பணிகள் நடக்கும். அதோடு அடுத்த 15 நாட்களுக்கு கதை, பாடல் விளையாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும்.பின்னரே பாடங்கள் எடுக்கப்படும். 
 
மேலும் தனியார் பள்ளிகளை பொறுத்த வரையில் 4,726 பள்ளிகள் இன்று முழு வீச்சில் தொடங்க உள்ளன. அதோடு திருவாரூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.