திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (07:29 IST)

விடுமுறை அறிவிப்புக்கு பின் விடைபெற்ற மழை: ரத்தாகுமா விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. மேலும் இந்த மழை இன்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது 
 
இதனையடுத்து சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் நேற்று இரவே வெளிவந்துவிட்டது. ஆனால் இன்று விடுமுறை என உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவுக்கு பின் மழை குறைய ஆரம்பித்துவிட்டது. இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளை சுத்தமாக மழை இல்லை. அதுமட்டுமின்றி முக்கிய சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீரும் தற்போது வடிந்து விட்டன 
 
இதனால் அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து ஆகி இன்று பள்ளி கல்லூரிகளில் இயங்கும் என்று அறிவிப்பு வருமா? என்ற சந்தேகம் ஒருசிலருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருசில தனியார் கல்லூரிகள் இன்று கல்லூரி இயங்கும் என மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்று பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது