குமரி, நீலகிரி மாவட்டங்களில் நாளை கல்லூரி, பள்ளிகள் விடுமுறை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மட்டுமின்றி கேரள எல்லையில் உள்ள தமிழகத்தின் நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலையே குமரி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என இரண்டு மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.