வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஆகஸ்ட் 2018 (15:55 IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் கூறியவதாவது:
 
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கடல் கொந்தளிப்புடம் காணப்படும் என்பதால் அந்தமான், வங்ககடலில் மீன்வர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
 
அதேபோல், காவிரி, பவானி, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளின் கரையோரம் யாரும் செல்பி எடுக்க வேண்டாம். தடை செய்யப்பட்ட ஆற்றுப்பகுதிகளில் யாரும் நீச்சலடிக்கக்கூடாது” என அவர் தெரிவித்தார்.