Daily Horoscope
✕

பள்ளி வாகனம் விபத்து...ஓட்டுநர் உள்ளிட்ட மாணவர்கள் விபத்து !

Written By Sinoj
Updated: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (22:46 IST)
திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில்  ஓட்டுநர் உள்ளிட்ட 9 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தில்  மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பள்ளி வாகனமானது தென்கினலூர் என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழிவிட ஓரமாக ஒதுங்கியது. இதில் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விபத்திற்குள்ளானது.  

இதில், 9 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் விபத்தில் சிக்கினர். அருகே இருந்த மக்கள் மாணவர்களையும் ஓட்டுநரையும் மீட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டை ரத்து பண்ணனும்!.. சந்திரபாபு நாயுடு அட்வைஸ்....

பட்டாசு சத்தத்தை விட பட்டாக்கத்தி சத்தம்தான் அதிகமா இருக்கு!.. உதயநிதி கோபம்..

ஈரானுடன் வேலை போர் முடியவிலை': புதிய தாக்குதல் குறித்து மறைமுக எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்..

இந்தியாவில் 5-டோர் பிரிட்ஜ் அறிமுகம்: விலை ரூ.2.60 லட்சம்...

சென்னைக்கு செல்ல விமான கட்டணம் அதிரடி உயர்வு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments