1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (13:44 IST)

செப்.1-ம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி

செப்.1-ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உறுதி என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இருப்பினும் தற்போது நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உறுதி என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.