தகுதியானவர்களுக்கு ரூ.1000 - அமைச்சர் சக்கரபாணி உறுதி
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது.
இந்நிலையில் இன்று அமைச்சர் சக்கரபாணி குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 பணம் வழங்கப்படும். ஏழ்மையான குடும்பங்கள் மட்டுமல்லாது தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்குய்ம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்துவார் எனத் தெரிவித்துள்ளார்.