செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 மே 2022 (10:21 IST)

School Reopen எப்போது - விடுமுறை முடிந்து ஜூன் 4 ஆம் வாரத்தில்...?

தமிழகத்தில் ஜூன் 4 ஆம் வாரத்தில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்.  

 
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டு என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
 
இந்த மாதம் 31 ஆம் தேதியுடன் தேர்வுகள் முழுமையாக முடிந்து விடுகின்றன. இதனிடையே நடந்த தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ள நிலையில் தேர்வு முடிந்தவுடன் ஜூன் 1 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 4 ஆம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜூன் மாதம் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூன் 4 ஆம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தெரிகிறது. 
 
ஆம், காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்ட காரணங்களால் ஜூன் 4 வது பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.