வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (14:18 IST)

செல்போன் வாங்க மூதாட்டியிடம் நகையை பறித்த 12ஆம் வகுப்பு மாணவி.. சேலத்தில் அதிர்ச்சி..!

cellphone
12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிட செல்போன் தேவை என்பதால் மூதாட்டி நகையை பறித்து செல்போன் வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவ மாணவிகள் மத்தியில் செல்போன் மோகம் அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கிறார்கள் என்று பெற்றோர்களை குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக மாணவ மாணவிகள் மத்தியில் ரீல்ஸ் வீடியோக்கள் மோகம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த  12 ஆம் வகுப்பு மாணவியும் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதற்காக செல்போன் வாங்க ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் பணம் இல்லை என்பதால் அந்த பகுதியில் உள்ள மூதாட்டியை தாக்கி அவரிடம் இருந்து நகையை பறித்த மாணவி அதை அடகு கடையில் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு விற்று உள்ளதாக தெரிகிறது.

போம்மாள் என்ற நகையை பறிகொடுத்த மூதாட்டி காவல்துறையில் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவிதான் நகையை பறித்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran