Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியா முடிவுக்கு வந்தது - எப்போது பட்டாசு வெடிக்கலாம்?

Updated: புதன், 31 அக்டோபர் 2018 (12:00 IST)
தீபாவளியன்று காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணிநேரமும் ஒதுக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 
சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்  
 
எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. காலம் காலமாக தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பட்டாசு வெடிப்பது தான் மரபு, ஆனால் உச்சநீதிமன்றம் மாலையில் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என அளித்திருக்கும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆகவே தீபாவளியன்று காலையிலும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 
 
இந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. இறுதியில், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி எனக்கூறிய நீதிபதிகள், அந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் எனவும் கூறினர். 
 
இந்நிலையில், அதிகாலை காலை 4 - 5 மணி முதலும், இரவு 9-10 மணி முதலும் பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றமே நேரத்தை அறிவித்துள்ளது. மேலும், இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அதிகாரி வரை அனைத்து அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லாம் காட்டு

அமெரிக்க பல்கலைக்கு 20 மில்லியன் டாலர் நன்கொடை கொடுத்த இந்திய தம்பதி.. இந்திய பல்கலைக்கு அளித்திருக்கலாமோ?

இனி 5 கோடி ரூபாய் வரை சொத்து வாங்குவது ரொம்ப ஈஸி.. தவெக அரசின் அதிரடி உத்தரவு...

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!...

என்கிட்ட சாரி கேட்டீங்களே!.. மறந்து போச்சா விஜய்?!.. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ...

மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன் சரியான வேட்பாளர் தானா? திமுக தொண்டர்களே அதிருப்தி?

அடுத்த கட்டுரையில்
Show comments